கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

  • October 18, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, தீபாவளிக்கு மறுநாள், 21ஆம் திகதியன்று  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

செய்தி

இன்று 100 மில்லி மீற்றர் மழை

  • October 18, 2025
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் . மேல் மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

  • October 18, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவ முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா கூறியுள்ளார். “எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்” என்று ‘பத்மே’ தன்னிடம் […]

கல்வி

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

  • October 18, 2025
  • 0 Comments

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் […]

தீபாவளிக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

  • October 18, 2025
  • 0 Comments

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

  • October 18, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு பொலிஸ் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, இந்த போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதை தொடர்ந்து, பொலிஸாரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  புதிய சாசனம் தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை எனக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

கவர்ச்சிக்கு மட்டும் கதாநாயகிகள் ரஜினி பட நடிகை காட்டம்

  • October 18, 2025
  • 0 Comments

நடிகை ராதிகா ஆப்தே அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார். இவர் ரஜினியின் கபாலி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், படங்களில் கதாநாயகிகளுக்கு எதிரான பாகுபாடு பற்றி அவர் பேசினார். பல நேரங்களில், ஹீரோக்களை அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதப்படுகின்றன எனவும் கதாநாயகிகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறினார். அவர் கூறுகையில், ‘ஹீரோக்களுக்காக மட்டும்தான் படங்கள் எடுக்கிற மாதிரி தெரியுது. ஏன்னா, முழு படமும் ஹீரோவைப் பத்தித்தான். ஹீரோயின்களுக்கு பெரிய […]

வணிகம்

தங்கத்தின் விலை பவுனுக்கு 400,000 ரூபாயாக அதிகரித்தது

  • October 18, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில்,   24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயை நேற்று (17) வௌ்ளிக்கிழமை கடந்துள்ளது.  இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார்தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது வியாழக்கிழமையுடன் (16) ஒப்பிடும் போது, இதன் விலை  15 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது.  அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் […]

செய்தி

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  • October 18, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம் திறக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் தலைமையில் கடந்த 16-ஆம் திகதி இந்தச் சாளரம் திறக்கப்பட்டது.சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் இங்கு வழங்கப்படுகின்றன. உலகின் எந்த நாட்டிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் அனைத்து தொழிலாளர்களும் இங்கு […]

வணிகம்

முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE!

  • October 18, 2025
  • 0 Comments

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் நேற்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது. இச்சுட்டெண் 217.65 புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து 22,633.80 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் 36.39 புள்ளிகள் அதிகரித்து 6,263.03 புள்ளிகளாக உயர்ந்தது. இதேவேளை, நேற்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 11.28 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.