செய்தி

வவுனியாவில் கோர விபத்து மூவர் படுகாயம்

வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துள்ளன. அதே நேரத்தில், பட்டா ரக வாகனமும் பயணித்துள்ளது.

வவுனியா பட்டானிச்சூரில் வைத்து பட்டா ரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள்கள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.