யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், முச்சக்கர வண்டியானது வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

