செய்தி

யாழில் பரிதாபமாக பறிபோன ஐந்து வயது சிறுமி!

யாழ் – கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் நேற்று (28.09.2025) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் 18 ஆவது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தென்மராட்சி – மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் செலுத்துனரும், பின்னால் அமர்ந்து சென்ற அவரது உறவினரான சிறுமியும் பலத்த காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.