செய்தி

யாழில் நுளம்புகுடம்பிகளை பேணியவருக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இணுவில் மற்றும் தாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு நடவடிக்கைகளின் போது வீட்டு உரிமையாளருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு பெருக்கத்திற்கேதுவான சூழலில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டதையடுத்து வீட்டின் உரிமையாளரிற்கு எதிராக இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (18)  வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது, வீட்டு உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

மழைகாலம் தொடரவுள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயமுள்ளதால் அப்பகுதி மக்கள் அனைவரையும் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் , எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.