செய்தி

யாழில் இளம் ஆசிரியை பரிதாப உயிரிழப்பு

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் 37 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்.

திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் யாழ் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து மூன்று வயது குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியை இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளம் ஆசிரியையின் உயிரிழப்பு பருத்தித்துறை பிரதேசத்தில்  பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.