முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்று விஷமிகளால் தீ வைத்து கொழுத்து முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (22.09.2025) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டின் வாசலில் நின்ற மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

வீட்டில் வயோதிபர் ஒருவர் தனிமையில் இருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

