செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்பலி

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (20.09.2025) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளப்பள்ளம் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியினை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று பரந்தன் பக்கம் இருந்து புதுக்குடியிருப்பு பக்கம் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உந்துருயில் பயணித்த 26 அகவையுடைய உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறு பிரதேச மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம், பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு விபத்தினை ஏற்படுத்திய மற்றைய உந்துருளியினை ஓட்டிச்சென்ற இளைஞனையும் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், மூங்கிலாறு பகுதிகளில் அண்மை காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.