செய்தி

முதலையுடன் மல்யுத்தம் செய்த அமெரிக்கர் கைது

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் மைக் ஹோல்ஸ்டன். இவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சமூகவலைதளங்களில் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அங்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள லாக் ஹார்ட் ஆற்றில் ஏராளமான முதலைகள் காணப்படுகின்றன. அங்கு சென்ற அவர் அதில் ஒரு முதலையின் கழுத்தை இறுக பிடித்தார்.

பின்னர் அதனுடன் மல்யுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் அதுவே அவருக்கு பிரச்சினையாகவும் அமைந்தது.

ஹோல்ஸ்டனின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்தன. அதன்பேரில் ஆஸ்திரேலிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.