விளையாட்டு

கிராண்ட்சுவிஸ் செஸ்: வைஷாலி, நிஹால் முன்னிலை

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 7-வது சுற்று நடந்தது.

ஓபன் பிரிவில் ஒரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 42-வது நகர்த்தலில் மேக்சிம் ரோட்ஷ்டினை (இஸ்ரேல்) வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நிஹால் சரின் 42-வது நகர்த்தலில் பர்ஹாம் மேக்சூட்லுவை (ஈரான்) வென்றார்.

உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 52-வது நகர்த்தலில் துருக்கியின் எடிஸ் குரெலிடம் தோல்வி அடைந்தார்.

தொடர்ச்சியாக 3-வது தோல்வியை தழுவிய குகேஷ் பட்டம் வெல்லும் வாய்ப்பையும் இழந்தார். 7-வது சுற்று முடிவில் ஜெர்மனியின் மேத்தியாஸ் புளுபாமும், இந்தியாவின் நிஹால் சரினும் தலா 5½ புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்கள்.

மகளிர் பிரிவில் தமிழகத்தின் வைஷாலி 7-வது சுற்றில் வெற்றியை தனதாக்கினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் 30-வது நகர்த்தலில் சீனாவின் குவா கீக்கு ‘செக்’ வைத்து 5-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். கேத்ரினோ லாக்னோ (ரஷியா) 5½ புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ