செய்தி

மன்னாரில் முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கல் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகியுள்ளது. 

மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக பல தரப்பினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். 

இந்தப் போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில், மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.