செய்தி

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் நேற்று மின்சாரம் தாக்கியதில் 41 வயதான வினாசித்தம்பி தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

35ஆம் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் உள்ள மின்சாரத்தினை எடுத்து அயலில் உள்ள வீட்டுக்கு மின்சாரத்தினை வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கியவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொன்டு செல்லும் போது உயிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.