செய்தி

மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.