செய்தி

மக்களை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது!

களுத்துறை ஈகொட உயனவில் , கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தன்னை மருத்துவராகக் காட்டிக் கொண்டதாகக் கூறப்படும் 54 வயது நபர் ஒருவர் நேற்று மாலை (21) கைது செய்யப்பட்டார்.

கைதான போலி மருத்துவர் வாதுவ, தெல்துவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் , ஸ்ரீ தலருக்கராம விகாரைக்கு அருகில் சஹன சேவா என்ற பெயரில் வைத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

அவர் வேறொரு மருத்துவருக்குச் சொந்தமான இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) பதிவு எண்ணை மோசடியாகப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், மருத்துவ மையத்தில் உரிமம் பெறாத மருந்துகள் இருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.