செய்தி

பெயர் குறிப்பிடப்படாத கிரீம்களுக்கு அபராதம்!

பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 11 புறக்கோட்டையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விற்பனையாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன நேற்று (10) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பில் சந்தேக நபரான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளரின் விபரங்கள், காலாவதி திகதி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத கிரீம் வகைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.