பண்டாரகம வேவிட்ட குளத்தில் சட்டவிரோதமாக கற்களை நிரப்பியதாக சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட குளத்தின் ஒரு பகுதியில் ஏபிசி கற்கள் நிரப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிரப்புதல் தொடர்பாக வேளாண்மை ஆராய்ச்சி அதிகாரி பண்டாரகம பொலிஸில் செய்த புகாரைத் தொடர்ந்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

