செய்தி

நுளம்பு பரவும் சூழலை பேணியவருக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டமானாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களவிஜயத்தின் போது டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 10 ஆதன உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது மன்றில் முன்னிலையான 10 ஆதன உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , தலா 08 ஆயிரம் ரூபாய் வீதம் 10 பேருக்கும் 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.