செய்தி

நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக்கொலை!

நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று அதிகாலை (8) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் நான்கு ஆண்டுகளாக தனது மூன்று பிள்ளைகளுடன், தலைமறைவாக இருந்து வந்த கொள்ளை சம்பவங்களின் குற்றவாளியே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை நடந்த ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் ஒன்றின்போது, பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலின்போதே கொல்லப்பட்டார்.

எனினும், சம்பவ நேரம் அவருடன் இருந்த ஒரு பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதன்போது அந்த பிள்ளையை தமது பொறுப்பில் எடுத்த பொலிஸார், ஏனைய இரண்டு பிள்ளைகளையும் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த நபர் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நியூசிலாந்தின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.