செய்தி

துசித ஹல்லொலுவ பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.

அண்மையில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ,

நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.