செய்தி

தமிழ் மொழி கொலை அதிகரிப்பு; மக்கள் விசனம்

பொது இடங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் தமிழ் கொலை அதிகரித்து வருவதாகவும் சில இடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களால் அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் உள்ள பெயர் பலகை மற்றும் பொது நிகழ்வுகளில் தவறான கருத்துக்களை தரும் தமிழ் சொற்பதங்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலை என்பது நாட்டின் அதிகமான பகுதிகளில் இருந்து தமிழ் பேசும் நோயாளர்கள் வரும் ஒரு இடமாகும்.

குறிப்பாக மலையகம், கிழக்கு, வடக்கு மாகாணம் போன்ற பல பகுதிகளில் இருந்து தமிழ் மொழியை மட்டும் வாசிக்கக் கூடியவர்கள் வருகை தருவது உண்டு.

இந்நிலையில் கண்டி வைத்தியசாலையில் பல இடங்களில் தமிழ் கொலைகள் இடம் பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.