செய்தி

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் சுகிர்தன் 26 வயதுடைய இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஆடை தொழிற்சாலை பணியினை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது பேருந்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.