ஆன்மீகம்

இருப்பதை வைத்து திருப்தியாக வாழப்பழகுவோம்!

ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்களான அந்த பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் வித்தியாசமான எண்ணமொன்று தோன்றியது.

அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது கிராமத்தெருவில் மேய்ந்துகொண்டிருந்த மூன்று எருமைகளை ஓட்டிக்கொண்டு அருகிலிருந்த காட்டுக்கு சென்றனர்.

எருமைகளின் முதுகில் 1, 2, 4 என்று எண்களை எழுதிவிட்டு பொழுது சாயும்வரை காத்திருந்தனர். இரவானதும் யாருக்கும் தெரியாமல் எருமைகளை பள்ளி வளாகத்துக்குள் ஓட்டிவிட்டு எதுவும் தெரியாததுபோல் வீடு திரும்பினர் இருவரும்.

காலையில் பள்ளிக்குள் நுழைந்த தலைமை ஆசிரியருக்கு ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. “என்னது இது, ஏதோ வித்தியாசமான வாடை பள்ளிக்கூட நடைபாதைகளில் வீசுகிறதே…” என்று சக ஆசிரியர்களை அழைத்து விசாரித்தபோது, “வாசம் மட்டும் இல்ல சார், சாணி கெடக்குது சில வகுப்பறைகளில்” என்று முகம் சுழித்தனர் ஆசிரியர்கள். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி முழுவதும் தேடியதில் மூன்று எருமைகளும் மாட்டியது.”தேமே” என்று இரவு முழுவதும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் சுற்றிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருந்தவை இப்போது காவல்துறை கட்டுப்பாட்டில்.

எருமைகளை ஓட்டிக்கொண்டு செல்ல இருந்த காவல்துறையினரிடம் கேட்டார் ஒரு ஆசிரியர், “அந்த இன்னொரு எருமை எங்கே..?”

“ஸ்கூல் முழுக்க தேடீட்டோம், இந்த மூணு எருமைகள் தாங்க இருந்துச்சு”
“அதெப்படிங்க சாத்தியம்? பாருங்க எருமைங்க முதுகில் 1, 2, 4-னு எழுதியிருக்குல்ல. அப்ப எருமை எண் 3 எங்க..?” குழப்பத்தோடு தலையை சொறிந்தனர் அதிகாரிகள்.

ஒட்டுமொத்த ஆசிரியர்களும், மாணவர்களும், களேபரம் கேள்விப்பட்டு கூடிய ஊர்மக்களும் அந்த நான்காவது எருமையை கண்டுபிடிக்கச்சொல்லி கோஷம் எழுப்பினர்.

பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைவரும் அந்த எருமை எண் மூன்றை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இல்லாத எருமையை இன்னும் தேடிக்கிட்டே இருக்காங்க….

வேடிக்கையா இருக்குல்ல..? சிரிச்சு முடிச்சப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. நாமும் நம் வாழ்க்கையில் இந்த “இல்லாத எருமையை” எத்தனைமுறை தேடி அலைஞ்சிருக்கோம்..?

நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தியாக நிறைவாக வாழ முடியும் என்ற நிலையில்கூட, பக்கத்துவீட்டுக்காரனோட புதிய கார், எதிர்த்த வீட்டுக்காரியோட புதிய பட்டுப்புடவை, கூட வேலை செய்றவரோட ப்ரமோஷன்.

அவனோட புகழ், இவளோட செல்வம் என்று நம்மிடம் இல்லாதவை பற்றி மட்டுமே நினைத்து, யோசித்து, கவலைப்பட்டு தூங்கமுடியாமல் கழித்த பொழுதுகள் எத்தனை..?
கொஞ்சம் நம் வாழ்க்கையை உற்றுநோக்கினால் நாம் அடைந்திருக்கும் வெற்றிகள், சாதித்திருக்கும் செயல்கள், நம்மை சுற்றியிருக்கும் அன்பான உறவுகள் எல்லாம் அழகாக தெரியும்.

இல்லாத எருமையை தேடுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு இருக்கும் எ(அ)ருமைகளோடு கொஞ்சம் நேரத்தை செலவழிப்போமே!

You may also like

ஆன்மீகம்

கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் !

செல்வம், வளமை, வெற்றி மற்றும் தனலாபம் ஆகியவை பெருக நாம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் தொடர்பான விளக்கம்.
ஆன்மீகம்

சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,