செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்த அனுர

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,

கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் சிறப்பு இரவு விருந்து வழங்கினார்.

இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோகமாக வரவேற்றதுடன், சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்து  புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.