செய்தி

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் 40 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர். நேற்று படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் மேற்கண்ட பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.