செய்தி

முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் எனக் கோரி மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு, கரைதுறைப்பற்றுபிரதேச சபை தவிசாளரை மாற்றக்கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் நேற்று (19) காலை முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இருந்து ஆரம்பமாகி கையில் பதாதைகளை தாங்கியவாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

மாற்றாதே, மாற்றாதே நீரியல்வளத்திணைக்கள அதிகாரியினை மாற்றாதே,நீதியாக செயற்படும் அதிகாரிக்கு இடம்மாற்றமா?கடற்றொழில் மக்களின் கருத்துக்களை செவிமடுக்காத தவிசாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்,

வளங்களை பாதுகாக்கும் நீரியல்வள அதிகாரியை இடம்மாற்றாதே போன்ற வசனங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்துள்ளார்கள்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.