செய்தி

நாட்டில் குறைவடைந்த மரக்கறி விலை

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமையால் தாம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பூசணிக்காய் ஒரு கிலோகிராம் 35 ரூபா முதல் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால் தமக்கு இலாபம் பெற முடியவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்தநிலையில், விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் அதற்காக கால அவகாசம் தருமாறும் விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.