திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகர் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனம் ஒன்று கார் மீது மோதுண்டு மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருவர் இலேசான காயங்களுடனும் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையிலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

