செய்தி

திருகோணமலை வாகன விபத்தில் இளைஞன் படுகாயம்

திருகோணமலை-  கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றையதினம்(31) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  கிண்ணியா பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளான கிண்ணியா மாலிந்துரை பகுதியை சேர்ந்த இளைஞன் எனவும் தெரியவருகிறது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.