செய்தி

கோட்டாபய ராஜபக்ச சி.ஐ.டிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2022 இல் கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்,

கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் முன்னிலையாக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.