செய்தி

சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றைய தினம் (20.08.2025) சிக்கியுள்ளார். 

சக சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தரின் தொலைபேசியை பயன்படுத்தி நூதன முறையில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளார். 

சுமார் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பணத்தை நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் (21.08.2025) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.