செய்தி

இந்திய கடற்படையின் INS ராணா திருகோணமலையில்

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று இந்த கப்பல் வந்தடைந்ததும் இலங்கை கடற்படையால் இது அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது. இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது மற்றும் 147 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த கப்பலில் 300 பணியாளர்கள் பயணிக்கின்றனர்.இந்த நிலையில் நாட்டில் தரித்திருக்கும் காலத்தில்,

இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நட்பை வலுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில், இந்திய கப்பலின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று குறித்த கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.