செய்தி

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் 29ம் திகதி (இன்று), காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

நேற்றைய தினம், செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது.

இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசாமியாரின் வருடாந்த பெரும் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நல்லூர் கந்தனின் அருளை பெற உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.