செய்தி

சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்

சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை 21ம் திகதி தொடக்கம் கொழும்பில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் அதற்கான பார்வைக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

1969 ஜுலை 21ஆம் திகதி நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ரோங் காலடியெடுத்து வைத்த போது எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தேசிய நூதனசாலையில் மிக விரைவில் சந்திரன் மற்றும் நிலவுக்கான மனிதர்களின் பயணம் குறித்த விபரங்கள் உள்ளடங்கிய காட்சிக் கூடம் ஒன்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.  

மற்றும், தேசிய நூதனசாலையின் பணிப்பாளர் சனோஜா கஸ்தூரிஆரச்சி இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.