மருத்துவம்

கண் பார்வையை மேம்படுத்தும் 5 உணவுகள்

கண் பார்வை தெளிவாகத் தெரிய வேண்டும் என்றாலே அதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.

அதில் நாம் எப்போதுமே முதல் இடத்தில் வைத்திருப்பது கேரட்டை தான். ஆனால் கேரட்டை விடவும் இன்னும் கண் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் ஐந்து வகையான உணவுகள் இருக்கின்றன.

கண் நரம்புகளையும் கண் பார்வையைத் திறனையும் அதிகரிக்கவும் கண்களை வறட்சி ஆகாமல் பாதுகாத்து ஹைட்ரேட்டிங்காக வைக்கவும் நிறைய தண்ணீர் குடிப்பதோடு ஆரோக்கியமான உணவு முறையும் அவசியம்.

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கண்களுக்கான பயிற்சிகளையும் போதிய கண் பரிசோதனைகளையும் பின்பற்றுவதோடு கீழ்வரும் உணவுகளை தினசரி டயட்டில் எடுத்துகிட்டு வாங்க.

உங்க கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.

  • இலைவடிவ காய்கறிகள்
  • கொழுப்பு நிறைந்த மீன்கள்
  • நட்ஸ் மற்றும் விதைகள்
  • முட்டை
  • ஆன்டி ஆக்சிடண்ட் அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள்
  • மேற்கண்ட ஐந்து வகையான உணவுகளும் உங்களுடைய கண்களைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த உணவுகளாக இருக்கும்.

இவற்றில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளையோ சாப்பிட்டு வரும்போது கண் பார்வைத்திறன் மேம்படும்.

இளம்வயதில் இருந்தே இதை சாப்பிடும்போது வயதாகும்போது ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட அறிகுறிகளை இது தாமதமாக்கும்.

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்