மங்கையர்

உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா?

உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து, டல்லாகவும், எண்ணெய் வழிந்தவாறும் இருக்கிறதா? அப்படியானால் உங்கள் சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

இப்படி சருமத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தாமல், பின் முகப்பரு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும்.

நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எண்ணெய் பசையும் கட்டுப்படும், முகமும் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.

கீழே முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் உங்களுக்கு எது ஈஸியோ அதைத் தேர்ந்தெடுத்து அடிக்கடி பயன்படுத்தி வாருங்கள்.

1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

2. கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதோடு, சருமத்திற்கு ஒருவித பிரகாசத்தை அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

You may also like

மங்கையர்

நகங்களைப் பராமரிக்க ….

நகங்களை வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசிக் கொள்வது பல இளம் பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அவ்வளவு ஆசையாக வளர்க்கும் நகங்கள் சிலருக்கு அவ்வப்போது உடைந்து