செய்தி

இலங்கை வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

நடப்பு ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த ஏழு மாத காலப் பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் இருந்தே கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

அதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து 269,780 பேரும் 124,652 பேர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும், 114,644 பேர் ரஷ்யாவில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையே நடப்பு ஜுலை மாதத்தில் மட்டும் 145,188 பேர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் குறைந்த பட்சம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவைப்பது அரசாங்கத்தின் இலக்காகும்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.