செய்தி

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

Tourists

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,247,815 ஐத் தாண்டியுள்ளது.

முதல் 13 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.இதில் 16,329 பேர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், இது சதவீதமாக 20.5 % மாகும்.

இரண்டாவது அதிகமாகப் பார்வையிடப்பட்ட நாடு ஐக்கிய இராச்சியம், மூன்றாவது அதிகமாகப் பார்வையிடப்பட்ட நாடு ஆஸ்திரேலியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டுக்கான இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து 258,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.