சில நேரங்களில் கடிகாரத்தைப் பார்க்கும்போது தொடர்ந்து 11:11 என்ற எண்ணைக் காண நேரிடலாம். குறிப்பாக இன்றைய காலத்தில் 11:11 என்பது அதிர்ஷ்டம், நல்ல மாற்றம் மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே எண்ணை மீண்டும் மீண்டும் காண்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழப்போகிறது என்பதற்கான சின்னம் என்று சிலர் நம்புகின்றனர். “11:11” என்பது மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்கும் ஒரு நினைவூட்டலாகவும் கருதப்படுகிறது.
11:11 பார்த்தால் என்ன நன்மை?
11:11 பார்க்கும் போது பலரின் மனதில் தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கை அதிகரிக்கிறது. “நல்லது நடக்கும்” என்ற எண்ணம் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது,சிலர் 11:11-ஐ புதிய வாய்ப்புகள், முன்னேற்றம் மற்றும் வாழ்க்கை மாற்றங்களின் அடையாளமாகக் கருதுகின்றனர்,இந்த எண்ணைக் காணும் போது பலர் தங்கள் விருப்பங்களையும் இலக்குகளையும் நினைத்துக்கொள்வர். இது முயற்சியை அதிகரிக்க உதவுகிறது,11:11 என்பது சிலருக்கு அமைதியையும் நேர்மறை உணர்வையும் தரும் ஒரு எண்ணாக உள்ளது.
ஒரு எண்ணை மனதில் முக்கியமாக நினைத்துவிட்டால், அதை அடிக்கடி கவனிப்பது மனித மனத்தின் இயல்பாகும். இதனை அறிவியலில் “Pattern Recognition” என்று கூறுகின்றனர். இருந்தாலும், நல்ல நம்பிக்கை மனிதருக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தரும் என்பது உண்மை.

