தகவல்கள் தொழில்நுட்பம்

சைபர் தாக்குதலிலிருந்து தப்பிக்க புதிய வசதி – மெட்டாவின் அறிவிப்பு!

முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர் பாதுகாப்பு அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. பயனர்கள் இந்த அம்சத்தை On செய்தவுடன், செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வலயத்திற்குள் வரும். 

முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் (Attachments) மற்றும் மீடியாக்கள் தானாகவே தடுக்கப்படும். தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அமைதியாக்கப்படும் (Silencing calls). அத்துடன், ஊடுருவிகளால் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் லிங்க் ப்ரிவியூ வசதி இந்த முறையில் செயலிழக்கச் செய்யப்படும். இணைய முகவரிகளின் மாதிரிக்காட்சிகள் (Link previews) முடக்கப்படும். இதன் மூலம் மால்வேர் (Malware) போன்ற தாக்குதல்கள் தடுக்கப்படும். 

இது Appleஇன் “Lockdown Mode” மற்றும் கூகுளின் “Advanced Protection Mode” ஆகியவற்றை ஒத்ததாக இருக்கும் என Whatsapp தெரிவித்துள்ளது. Whatsap நிறுவனத்தின் கருத்துப்படி, இந்த அம்சம் மிகவும் மேம்பட்ட கண்காணிப்பு அல்லது ஊடுருவும் முயற்சிகளை எதிர்கொள்ளும் ஒரு சிறிய குழுவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து தனிப்பட்ட செய்திகளும் End-to-End Encryption முறையில் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், இது ஒரு கூடுதல் கவசமாக இருக்கும்.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்