தகவல்கள்

கல்குலேட்டரில் எதற்காக AC, CE பொத்தான்கள் இருக்கின்றன?

பொதுவாக, கல்குலேட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பொத்தான்கள்(Buttons) எண்கள், கழித்தல், கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகும். ஆனால், இது தவிர, கல்குலேட்டரில் பல பொத்தான்கள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் AC மற்றும் CE பொத்தான் ஆகும். பலருக்கு இது எதற்காக கல்குலேட்டரில் உள்ளது என்பது தெரியாது.

அந்த வகையில் AC மற்றும் CE போன்ற பொத்தான்களின் பயன்பாடு பற்றி பதிவில் பார்க்கலாம். கல்குலேட்டரில் உள்ள AC பொத்தானின் விரிவாக்கம் All Clear ஆகும். நீங்கள் கல்குலேட்டரில் செய்த கணக்கீடுகளை முழுமையாக அழிக்க விரும்பினால் இந்த AC ( All Clear) பொத்தானை அழுத்தலாம். 

கல்குலேட்டரில் உள்ள AC னை அழுத்தியவுடன், நீங்கள் டைப் செய்த அனைத்து எண்கள், சின்னங்கள் மற்றும் செயல்பாடுகள் அழிந்துவிடும்.  இதன் பின்னர்  கல்குலேட்டர் பழைய நிலைக்கு திரும்பும். இதற்குப் பின்னர் நீங்கள் ஒரு புதிய கணக்கீட்டைத் தொடங்கலாம். இரண்டாவது பொத்தான் CE, அதன் முழு விரிவாக்கம் Clear Entry ஆகும். கடைசி எண்ணை நீக்க விரும்பும் போது Clear Entry பொத்தான் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் தவறுதலாக ஒரு எண்ணை டைப் செய்கிறீர்கள் என்றால், முழு கணக்கீட்டையும் அழிக்க CE பொத்தானை அழுத்தினால் அந்த எண் மட்டுமே நீங்கும். முழு கணக்கையும் நீக்கி அதை மீண்டும் செய்யத் தேவை இல்லை. 

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்