தகவல்கள்

Safety Pinஇல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?

Safety Pin (ஊக்கு) வரலாறு மிகவும் பழமையானது. லத்தீன் மொழியில், இது ஃபைபுலே (fibulae) என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல யுகத்தில் (Bronze Age) ஐரோப்பாவில் தோன்றியது என்று கூறப்படுகிறது.

இந்த ஊக்கை 1849இல் வால்டர் ஹன்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு கம்பியை வளைத்து இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார். இப்படி இதை உருவாக்கும் போது அந்த நேரத்தில் இதற்கு  இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்பட்டதாம்.

ஒன்று, வடக்கு ஐரோப்பிய முறை. இது ஊசிக்கு இரண்டு தனித்தனி பாகங்களைக் கொண்டு செய்யபட்டது. அதற்கு ஒரு ஸ்பிரிங் இல்லை. ஒரு ஊசியில் ஒரு துளை இருந்தது.

மற்றைய  ஊசி அந்தத் துளை வழியாகச் சென்று கொக்கியில் இணைக்கப்பட்டது. இது மிகவும் சிக்கலான வடிவமைப்பாக இருந்தது. மற்றொன்று, மத்திய ஐரோப்பிய, கிரேக்க மற்றும் இத்தாலிய பாணிகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள் நவீன பாதுகாப்பு ஊசிகளைப் போலவே இருந்தன.ஊசி நடுவில் ஒரு ஸ்பிரிங் கொண்ட ஒற்றைக் கம்பியால் ஆனது. இது நெகிழ்வுத் தன்மையை கொண்டிருந்தது. கம்பியின் ஒரு முனை கூர்மையாகவும் மறுமுனை வளைந்தும் இருந்தது. இதனால் கூர்மையான முனை செருகப்படும். நீங்கள் எப்போதாவது Safety Pinஐ உற்றுப் பார்த்திருந்தால், அதன் அமைப்பு மற்றும் வேலை முறை மிகவும் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இது இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை அதன் செயல்பாட்டிற்கு அவசியமானவை. ஊக்கின் அடிப்பகுதியில் உள்ள கம்பி, ஒரு வளையம் அல்லது சுருளாக வளைக்கப்பட்டுள்ளது.இந்தத் துளை ஒரு ஸ்பிரிங் போல செயல்படுகிறது. இந்த ஸ்பிரிங் பின்னில் பதற்றத்தை உருவாக்குகிறது. முள் முனையை உறுதியாகப் பிடித்துக் கொள்கிறது. இந்த பதற்றம் இல்லாமல், முள் மீண்டும் மீண்டும் திறக்கும், இது காயத்தை ஏற்படுத்தும்.

ஹன்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பான சேப்டி பின் மூலம் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, கம்பியால் விரல்களில் ஏற்பட்ட காயமும் தவிர்க்கப்படுவதால், இதற்கு சேஃப்டி பின் என்று பெயர் வந்தது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்