மருத்துவம்

மூளையின் சோர்வைப் போக்கும் 6 எளிய வழிகள்!

இயந்திரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் எப்படி பழுதாகிறதோ, அப்படித்தான் நாமும் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருந்தால் நமது மூளை அதன் செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும்.

அதுபோன்ற தருணங்களில் சில வழிமுறைகளை பின்பற்றி நாம் புத்துணர்ச்சி அடைவது அவசியம். இந்த பதிவில் முடங்கிக் கிடக்கும் மூளையை புத்துணர்ச்சி அடைய செய்வதற்கான ஆறு வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

அதிக இலக்குகள் வேண்டாம்

சிலர் தங்களால் அனைத்துமே செய்து சாதிக்க முடியும் என நினைத்துக்கொண்டு, பல குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு மிகப்பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வார்கள். அவர்கள் நிர்ணயம் செய்யும் பல குறிக்கோள்களில் ஒன்றைக் கூட உருப்படியாக செய்ய முடியாது. எனவே, உங்களால் உறுதியாக செய்ய முடியும் என்ற விஷயங்களில் மட்டும் உங்களுடைய குறிக்கோளை வைத்து முன்னேறுங்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியாக நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் இலக்குகள், உங்களுக்கு சுமையாக மாறலாம். 

ஒரே நேரத்தில் பல பணிகள் வேண்டாம்

நமது மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை. அதனால் ஒரு சமயத்தில் ஒரு வேலையில் முழுக் கவனத்துடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். ஒரே நேரத்தில் பல வேலைகளை (Multiple tasks)செய்யும்போது, சில சமயங்களில் தவறுகள்(Mistakes),மன அழுத்தம்(Stress), குறைந்த உற்பத்தித்திறன் (Productivity) போன்றவற்றிற்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, ஒரு சமயத்தில் ஒரு வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஓய்வு அவசியம்

மனிதர்கள் ஒன்றும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி செயல்படும் இயந்திரம் கிடையாது. நாம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட ஓய்வு என்பது தேவை. நீங்கள் எந்த அளவுக்கு ஓய்வு(Rest) எடுத்து மூளைக்கு ஆற்றலைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களால் முன்பை விட சிறப்பாக செயல்பட முடியும்.

சீக்கிரம் தூங்குங்கள்

இப்போது அனைத்துமே டிஜிட்டல்(Digital) மயமாகிவிட்டதால், அனைவருமே கையில் ஒரு ஸ்மார்ட்போன்(smartphone) வைத்துக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் இருக்கிறார்கள். இது உங்களின் மூளையை வெகுவாக பாதிக்கும். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் கட்டாயம் தூங்கவேண்டும் என்பதைவிட, அந்த ஏழு மணி நேரம் சரியான நேரத்தில் தூங்குகிறோமா என்பது அவசியம். எனவே, உங்களுடைய மூளை சிறப்பாக செயல்பட விரைவாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்

உங்கள் மூளை முடங்கிக் கிடக்கிறது என்றால், அதற்கு நீங்கள் தொடர்ச்சியாக எதிர்மறை எண்ணங்களை (negative thoughts) கொடுக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் மூளைக்குள் எதுவெல்லாம் எதிர்மறை எண்ணங்களைத் திணிக்கிறதோ அவை அனைத்தையும் ஒதுக்குங்கள். தவறான சமூக ஊடக இடுகை(social media post), தவறான நண்பர்கள் போன்றவற்றை ஒதுக்குங்கள். நீங்கள் நேர்மையாக சிந்தித்தாலே மூளை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்:

மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க அல்லது முடங்கிய மூளை புத்துணர்வு பெற உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். நீங்கள் உங்களை சிறப்பாக மாற்ற வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தால், முதலில் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். உடற்பயிற்சிக்கு உங்களுடைய கவலை, சோகங்களை மறையச் செய்யும் ஆற்றல் உள்ளது.

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்