விளையாட்டு

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்த இரண்டு போட்டிகளை நியூசிலாந்தும் வென்றதுடன், நான்காவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், டுனெடினில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதன் மூலம் 3-1 என்ற ரீதியில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

மே. தீவுகள்: 140/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 38 (32), றொமாரியோ ஷெப்பர்ட் 36 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக்கப் டஃபி 4/35 [4], ஜேம்ஸ் நீஷம் 2/31 [3.4], கைல் ஜேமிஸன் 1/13 [2], மிஷெல் பிறேஸ்வெல் 1/14 [2], மிற்செல் சான்ட்னெர் 1/16 [3], இஷ் சோதி 1/29 [4])

நியூசிலாந்து: 141/2 (15.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே ஆ.இ 47 (42), டிம் றொபின்சன் 45 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷாமர் ஸ்பிறிங்கர் 1/8 [2], றொமாரியோ ஷெப்பர்ட் 1/21 [2.4], மத்தியூ போர்டே 0/17 [3])

போட்டியின் நாயகன்: ஜேக்கப் டஃபி(Jacob Duffy)

தொடரின் நாயகன்: ஜேக்கப் டஃபி(Jacob Duffy)

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ