நாளை இரண்டாம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகள் வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானம் துப்பரவு செய்யும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது.மாநகரசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் மற்றும் செ.வருணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மாநகரசபையினால் குறித்த துப்பரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இறந்த தமது உறவுகளுக்காக வழிபாடுகளை மேற்கொள்ளும் விதமாக வருடாவருடம் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி மரித்த விசுவாசிகள் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வினை முன்னிட்டே குறித்த துப்பரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்தின் போது மாநகரசபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், மேற்பார்வையாளர், துப்பரவுப் பணியாளர்கள் ஆகியோரோடு பொது மக்களும் வருகை தந்து அவரவர் உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் துப்பரவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்

