செய்தி

 ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ்

இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்கள் (NEV) அறிமுகப்படுத்தப்படவுள்ளன.டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் ஒட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய ஒட்டோ உற்பத்தியாளர் GWM உடன் இணைந்து இந்த வாகனங்களை அறிமுகப்படுத்துவதாக தெரியவருகிறது. 

ஒட்டோ மொபைல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.இதன்படி, ஹவல் H6, ஹவல் GT, டேங்க் 300 மற்றும் டேங்க் 500 உள்ளிட்ட GWM இன் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மொடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.