தகவல்கள்

செட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்திய செயலி!

ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. 

கூகுள் பிளே ஸ்டோர்(Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்(Apple App Store) ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து செட்ஜிபிடி(ChatGPT), ஜெமினி(Gemini) போன்ற பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது. 

பெர்ப்ளெக்சிட்டி சாதாரண செட்போட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Chat) மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக இருக்கிறது. 

மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

புதிய ஏஐ செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதன் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன. தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. 

சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்