செய்தி

மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்களை குவிப்பது தொடர்பான வாக்கு மூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு  அழைக்கப்பட்டார். 

இந்த நிலையிலே அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.