செய்தி

வரிகளை மனிதாபிமான முறையில் மறுசீரமைக்கலாம்! அமைச்சர் ஹந்துன்னெத்தி

அரசாங்கத்தின் சகல துறைகளிலும் வருமானம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு சலுகைகள் , நிவாரணங்களை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு அரசாங்கத்தின் சகல துறைகளிலும் எதிர்பார்த்ததை விட அதிகளவில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இனியும் வரிகளை விதிக்கவோ, அதிகரிக்கவோ தேவையில்லை.

அதற்குப் பதிலாக, வரிகளை மனிதாபிமான முறையில் மறுசீரமைக்கலாம். அதற்கான காலம் கனிந்துள்ளது.

அத்துடன் பொதுமக்களுக்கு சலுகைகள், நிவாரணங்களை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.