செய்தி

இலங்கையில் மிக ஆபத்தான “மியாவ்” கண்டுபிடிப்பு

இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் குறித்து அரசு பகுப்பாய்வாளர் நடத்திய சோதனைகளின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி. கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.

“மியாவ்” என்று அழைக்கப்படும் இந்த வகை போதைப்பொருள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

குறித்த போதைப்பொருள் வகை மனித நரம்பு மண்டலத்தை கடுமையாக சேதப்படுத்தும் ஒரு வகை மருந்து என்றும் கூறப்படுகிறது.

வெலிகம பொலிஸார் கடந்த 21 ஆம் திகதி வெலிகமவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்தப்பட்டு வந்தது, இது தொடர்பில் மால்டோவா நாட்டவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் ரஷ்ய நாட்டவர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்று, சம்பந்தப்பட்ட இடத்தில் போதைப்பொருட்களை தயாரித்தது தெரியவந்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.