செய்தி

மூதூரில் படகு மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்

மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பியபோது, படகு ஒன்று மூழ்கியதில் மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் என்ற நபர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த படகில் இரு மீனவர்கள் சென்றிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் காணாமல் போன நிலையில், மற்றொரு மீனவர் மிதக்கும் கலனின் உதவியுடன் மிதந்து வந்த நிலையில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர் 38 வயதுடைய நபர் என்றும், மூன்று பிள்ளைகளின் தகப்பனான இவரை தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.